மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
2021 அக்டோபர் 28 முதல் 31 வரை ‘ஆதார் ஹாக்கத்தான்-2021’-ஐ உடாய் நடத்தவுள்ளது
Posted On:
26 OCT 2021 11:38AM by PIB Chennai
2021 அக்டோபர் 28 முதல் 31 வரை ‘ஆதார் ஹாக்கத்தான்-2021’-ஐ உடாய் (இந்திய பிரதேயேக அடையாள ஆணையம்) நடத்தவுள்ளது. இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இந்த போட்டியின் நோக்கம், இந்திய இளைஞர்களிடையே புதுமைகளுக்கான கலாச்சாரத்தை அடையாளப்படுத்துவதாகும்.
புதுமைகள் என்பது ஒரு வார்த்தையோ நிகழ்ச்சியோ கிடையாது, அறிவு என்பது சக்தியாகவும், புதுமைகள் என்பது வளர்ச்சியின் உந்துசக்தியாகவும் இருக்கும் காலகட்டத்தில் அது ஒரு தொடர்ந்து நடக்கும் செயல்முறை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.
பதிவு மற்றும் சரிபார்த்தல் என்பது இந்த ஹாக்கத்தானின் மையக்கருவாகும். நாடெங்கிலும் உள்ள முன்னணி பொறியியல் கல்லூரிகளில் இருந்து இருந்து 2700-க்கும் அதிகமான மாணவர்கள் இதில் கலந்து கொள்ள பதிவு செய்துக் கொண்டுள்ளனர். நிபுணர்களை உறுப்பினர்களாக கொண்ட நடுவர் குழு ஒன்று மதிப்பீடுகளை செய்யும். வெற்றி பெற்ற அணிக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணி வழங்கபப்டும்.
ஹாக்கத்தான் குறித்து பேசிய உடாய் தலைமை செயல் அதிகாரி திரு சௌரப் கார்க், ஆதார் சேவைகளுக்கு பயனுள்ள வகையில் சிறப்பான புதுமைகளை மாணவர்கள் உருவாக்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766521
-----
(Release ID: 1766665)