பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இங்கிலாந்து கடற்படைத் தளபதி அட்மிரல் சர் டோனி ரடாக்கின் இந்தியா வந்தார்

Posted On: 22 OCT 2021 2:58PM by PIB Chennai

இங்கிலாந்து கடற்படைத் தளபதி அட்மிரல் சர் டோனி ரடாக்கின் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வந்தார்.

அவர், இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பிர் சிங்கை, இன்று சந்தித்துப் பேசினார். இருதரப்பு கடற்படை ஒத்துழைப்பை  மேம்படுத்துவது, அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் இருதரப்பினரும்  ஆலோசித்தனர்.

மும்பையில் உள்ள இந்திய கடற்படையின் மேற்குக் கட்டுப்பாட்டு மையத்திற்குச் செல்லும் இங்கிலாந்து கடற்படைத் தளபதி அட்மிரல் சர் டோனி ரடாக்கின், வைஸ் அட்மிரல் ஆர் ஹரிகுமாரைச் சந்தித்துப் பேசுகிறார்.

ஏராளமான விஷயங்களில் இங்கிலாந்து மற்றும் இந்தியக் கடற்படைகள் இணைந்து செயல்படுகின்றன. இருதரப்பினரிடையே கூட்டுப் பயிற்சிகள் நடைபெறுகின்றன, கடல்சார் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

அட்மிரல் சர் டோனி ரடாக்கின் இந்தப் பயணம் இருநாடுகளிடையேயான கடற்படை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-------

 



(Release ID: 1765784) Visitor Counter : 231