பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
என்ஆர்எல் (நுமலிகர் சுத்திகரிப்பு நிறுவனம்) மற்றும் ஐஜிஜிஎல் (இந்திர தனுஷ் எரிவாயுத் தொகுப்பு நிறுவனம்) நிறுவனங்களிடையே குழாய் வழிப்பாதையைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்து
Posted On:
22 OCT 2021 1:50PM by PIB Chennai
என்ஆர்எல் (நுமலிகர் சுத்திகரிப்பு நிறுவனம்) மற்றும் ஐஜிஜிஎல் (இந்திர தனுஷ் எரிவாயுத் தொகுப்பு நிறுவனம்) நிறுவனங்களிடையே குழாய் வழிப்பாதையைப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இரு நிறுவனங்களும் பயனடையும் இந்த ஒப்பந்தத்தில் என்ஆர்எல் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு பி ஜே சர்மா, ஐஜிஜிஎல் நிறுவனத்தின் திட்டத்தலைமை மேலாளர் திரு பங்கஜ் பட்டோவரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து மேற்கு வங்கம். ஜார்கண்ட் பீகார் வழியாக அசாம் மாநிலத்தில் உள்ள நுமலிகர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 1630 கிலோ மீட்டர் நீளத்தில் கச்சா எண்ணெய் குழாய் அமைக்கும் பணியில் என்ஆர்எல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. என்ஆர்எல் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தில் இந்தக் குழாய் அமைக்கும் பணி மிக முக்கியமானதாகும்.
ஐஜிஜிஎல் நிறுவனம் குவஹாத்தியிலிருந்து நுமலிகர் வரை எரிவாயுக் குழாய் அமைக்கும் பணியை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. வடக்கு குவஹாத்தியின் பைகாடா என்ற இடத்திலிருந்து நுமலிகர் வரை 186 கிலோமீட்டர் தூரத்திற்கு இரு நிறுவனங்களின் குழாய்களும் பொதுவான பாதையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதனால் இந்தக் குழாய் வழிப்பாதைப் பகிர்வு ஒப்பந்தம் என்ஆர்எல் மற்றும் ஐஜிஜிஎல் நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1765703
------
(Release ID: 1765770)