பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பெருந்தொற்றுக்கு பிந்தைய சர்வதேச பொருளாதார மீட்சியை துரிதப்படுத்த தூய்மையான, குறைந்த விலையிலான, நம்பத்தகுந்த மற்றும் நீடித்த எரிசக்தி தேவை: திரு ஹர்தீப் சிங் புரி
Posted On:
20 OCT 2021 5:17PM by PIB Chennai
எரிசக்திக்கான அணுகல் விலை குறைவானதாகவும் நம்பத் தகுந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதை இந்தியா நம்புவதாக மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி இன்று கூறினார்.
புதுதில்லியில் செரா வாரத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்தாவது இந்திய எரிசக்தி பேரவையின் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அவர், பெருந்தொற்றுக்குப் பிந்தைய சர்வதேசப் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்த தூய்மையான, குறைந்த விலையிலான, நம்பத்தகுந்த மற்றும் நீடித்த எரிசக்தி தேவை என்று கூறினார்.
புதிய எரிசக்தி உள்கட்டமைப்பை நாம் உருவாக்கும் வரை நம்பத்தகுந்த எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் உலகத்திற்குத் தேவை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
இதுவரை காணாத சவால்களை உலகம் எதிர் கொண்டிருப்பதாக கூறிய அவர், எரிசக்தி மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மிகப்பெரிய சமமின்மை எரிசக்தி சந்தைகளில் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
தற்போதைய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் எண்ணெய்க்காக இந்திய 85 சதவீதம் இறக்குமதியை சார்ந்து இருப்பதாகவும் எரிவாயுக்காக 55 சதவீதம் இறக்குமதியை சார்ந்திருப்பதாகவும் அவர் கூறினார். நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி செலவுகளில் 20 சதவீதம் இவற்றுக்காக செலவிடப்படுவதாக அவர் கூறினார்.
கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இவற்றின் விலைகள் கடந்த காலாண்டில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அமைச்சர் கூறினார். இதன் காரணமாக எரிபொருட்களின் உள்நாட்டு விலைகளும் உயர்ந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக உருவாவதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1765199
*****************
(Release ID: 1765245)