ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தைச் சேர்ந்த பல்துறைக் குழு ராஜஸ்தான் பயணம்

Posted On: 19 OCT 2021 4:55PM by PIB Chennai

தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட பல்துறைக் குழு ஒன்று, 2021 அக்டோபர் 18 முதல் 21 வரை ராஜஸ்தானில் பயணம் மேற்கொண்டுள்ளது.

பரான், தவுசா, ஜோத்பூர், பில்வாரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இந்தக் குழு பயணம் மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று முதல் ஐந்து கிராமங்களை தினமும் பார்வையிடும் குழுவினர்திட்டங்களின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்கின்றனர்.

திட்டத்தின் முன்னேற்றம் குறித்து தெரிந்து கொள்வதற்காகவும், கள நிலவரத்தை ஆய்வு செய்ததாகவும் அனைத்துக் கிராமப்புற வீடுகளுக்கும் குடிதண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கும் இலக்கை அடைவதற்கான மாநிலத்தின் தயார் நிலைக் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட அதிகாரிகள், உள்ளூர் சமுதாயத்தினர், கிராமப் பஞ்சாயத்து மற்றும் தண்ணீர் குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் இந்தக் குழு உரையாடுகிறது. பின்னர், கள நிலவரம் குறித்து மாநில அரசு மற்றும் மாவட்டங்களின் உயர் அதிகாரிகளுடன் இக்குழு தனது கருத்துகளை பகிர்ந்துகொள்ளும்.

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிதண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கும் இலக்கை அடைய ராஜஸ்தான் அரசு உறுதி பூண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764918

*******


(Release ID: 1764948) Visitor Counter : 205


Read this release in: English , Urdu , Hindi