நித்தி ஆயோக்
இந்தியாவின் புவிசார் எரிசக்தி வரைபடத்தை நிதி ஆயோக் வெளியிட்டது
प्रविष्टि तिथि:
18 OCT 2021 6:34PM by PIB Chennai
இந்தியாவின் புவிசார் எரிசக்தி வரைபடத்தை டாக்டர் ராஜீவ் குமார் (துணைத் தலைவர், நிதி ஆயோக்), டாக்டர் வி கே சரஸ்வத் (உறுப்பினர், நிதி ஆயோக்) மற்றும் திரு அமிதாப் காந்த் (தலைமை நிர்வாக அதிகாரி, நிதி ஆயோக்) 2021 அக்டோபர் 18 அன்று வெளியிட்டனர். இஸ்ரோ தலைவர் மற்றும் விண்வெளி துறை செயலாளர் டாக்டர் கே சிவன் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்திய அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சகத்தின் ஆதரவுடன் விரிவான புவியியல் தகவல் அமைப்பு எரிசக்தி வரைபடத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து நிதி ஆயோக் உருவாக்கியுள்ளது. நாட்டின் அனைத்து எரிசக்தி வளங்களின் முழுமையான விவரங்களை இது வழங்குகிறது,
மின் நிலையங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், நிலக்கரி வயல்கள் மற்றும் நிலக்கரி தொகுதிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிலையங்கள் மற்றும் உள்ளிட்ட 27 கருப்பொருள் அடுக்குகளை இது கொண்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ராஜீவ் குமார், இந்தியாவின் எரிசக்தி துறையின் நிகழ்நேர மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடலுக்கு இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். புவிசார் அடிப்படையிலான எரிசக்தி சொத்துக்களின் மேப்பிங் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் சாதகமானதும் மற்றும் கொள்கை உருவாக்கும் செயல்முறையை துரிதப்படுத்த உதவுவதுமாக இருக்கும். இது ஒரு சிறந்த ஆராய்ச்சிக் கருவியாக திகழும் என்று அவர் கூறினார்.
https://vedas.sac.gov.in/energymap எனும் முகவரியில் இதை அணுககலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1764738
----
(रिलीज़ आईडी: 1764780)
आगंतुक पटल : 373