சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதார அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி 1.4 கோடி மருத்துவ பரிந்துரைகளை நிறைவு செய்துள்ளது, முதல் 3 இடங்களில் தமிழகம்

Posted On: 18 OCT 2021 6:05PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய தொலைதூர மருத்துவ சேவையான இ-சீஞ்சீவனி, நாடு முழுவதும் 1.4 கோடிக்கும் மேற்பட்ட மருத்துவ பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இதில் இரு வகையான பரிந்துரைகள் உள்ளன. இ-சஞ்சீவனி ஏபி-எச்டபிள்யூசி ஆலோசனையில் மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசிக்கின்றனர். இ-சஞ்சீவனி ஓபிடி பிரிவில் புறநோயாளிகள் மருத்துவரிடம், மருத்துவ ஆலோசனையைப் பெறுகின்றனர்.

கொரோனா தொற்றின் போது பாதுகாப்பான மருத்துவ ஆலோசனைளை வழங்குவதற்காக இந்த சேவை தொடங்கப்பட்டது. இ-சஞ்சீவனி தளத்தில் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் தொலைதூர மருத்துவ சேவையை இதன் மூலம் அளிக்கின்றனர்.

இந்த தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை பெறுவதில் தமிழகம் உட்பட 10 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. ஆந்திரப் பிரதேசம் 47,28,131 ஆலோசனைகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகா 25,73,609 ஆலோசனைகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம் 16,30,795 மருத்துவ ஆலோசனைகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

மற்ற மாநிலங்களின் நிலவரங்களுக்கும் மேலும் தகவல்களுக்கும் கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764724

-----



(Release ID: 1764778) Visitor Counter : 225


Read this release in: English , Urdu , Hindi , Manipuri