சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021 ஆகஸ்ட் மாதத்தில் கனிம உற்பத்தி 23.6 % அதிகம்

Posted On: 18 OCT 2021 4:44PM by PIB Chennai

சுரங்கத்துறையில் 2021 ஆகஸ்ட் மாதத்திற்கான  கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை: 2011-12=100) 103.8 ஆக இருந்தது.  இது கடந்த ஆண்டைவிட 23.6% அதிகம். 2020-21 ஏப்ரல்-ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி கடந்தஆண்டு இதே கால அளவைவிட 25.1% அதிகரித்துள்ளது.  2021 ஆகஸ்ட் மாத்த்த்தில் முக்கிய கனிமங்களின் உற்பத்தி அளவு : நிலக்கரி 539 லட்சம் டன், லிக்னைட் 37 லட்சம் டன், இயற்கை எரிவாயு 2,851 மில்லியன் கியூபிக் மீட்டர், பெட்ரோலியம் (கச்சா எண்ணெய்) 25 லட்சம் டன், பாக்ஸைட் 17.37 லட்சம்  டன்குரோமைட் 1.75 லட்சம் டன், தாமிரம் 10000 டன்தங்கம் 89 கிலோ, இரும்புத்தாது 197 லட்சம் டன், காரீயம் 33000 டன் மாங்கனீஸ் தாது 1.8 லட்சம் டன், துத்தநாகம் 1.33 லட்சம் டன், சுண்ணாம்பு 311 லட்சம் டன், பாஸ்போரைட் 1.23 லட்சம் டன். மாங்கனசைட் 10000 டன்மற்றும் வைரம் 38 காரட்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764693

------


(Release ID: 1764753) Visitor Counter : 187


Read this release in: English , Urdu , Hindi