நிலக்கரி அமைச்சகம்
மகாநதி நிலக்கரிச் சுரங்க நிறுவனம் (எம் சி எல்) 5.47 லட்சம் டன் நிலக்கரி விநியோகித்து சாதனை
Posted On:
18 OCT 2021 4:35PM by PIB Chennai
முன்னணி நிலக்கரி உற்பத்தி நிறுவனமான மகாநதி சுரங்க நிறுவனம் நேற்று 5.47 லட்சம் டன் நிலக்கரியை விநியோகித்து தனது முந்தைய சாதனையான 5.45 லட்சம் டன்னை 15 நாட்களுக்குள் முறியடித்துள்ளது.
இந்த நிறுவனம் அதிகபட்சமாக 103 சரக்கு ரயில் பெட்டிகளில் நிலக்கரியை விநியோகித்துள்ளது. இதில் 65 சரக்கு ரயில் பெட்டிகள் கல்சர் நிலக்கரிச் சுரங்கத்திலிருந்தும். 38 சரக்கு ரயில் பெட்டிகள் ஐபி பள்ளத்தாக்கு நிலக்கரிச் சுரங்கத்திலிருந்தும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த சாதனைக்காக எம்சிஎல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு பி கே சின்ஹா, எம்சிஎல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். எம்சிஎல் நிறுவனத்தில் அக்டோபர் மாத விநியோகத்திற்கான நிலக்கரி போதிய அளவில் உள்ளதாக திரு சின்ஹா தெரிவித்தார்.
நடப்பு நிதியாணடில் எம்சிஎல் நிறுவனம் 78.5 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து 12.16% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764690
------
(Release ID: 1764730)
Visitor Counter : 199