குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் இயக்கம் தேவை: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு
Posted On:
17 OCT 2021 5:42PM by PIB Chennai
சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் இயக்கம் தேவை என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மக்கள் தானாக முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆந்திரப் பிரதேசத்தின் கதியம் கிராமத்தை தாவர வளர்ப்பு மையமாக மாற்றிய மறைந்த திரு பல்லா வெங்கண்ணாவின் வாழ்க்கை கதை பற்றிய ‘ நர்சரி ராஜ்யானிகிர ராஜூ’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:
பசுமை பாரதத்தை உருவாக்க திரு வெங்கண்ணா அயராது உழைத்தார். நாடு முழுவதும் இருந்து 3000 வகை தாவரங்களை திரு வெங்கண்ணா சேகரித்தார். ஒவ்வொரு வீடும் பசுமையாக மாறினால், நாடு பசுமை ஆகும் என அவர் நம்பினார். திரு பல்லா வெங்கண்ணாவின் வாழ்க்கை கதை, எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கிறது. வேகமான நகர்ப்புறமயமாக்கலால், காடுகள் அழிக்கப்படுகின்றன. அதனால் உலகின் பல பகுதிகளில் சமீபகாலமாக வெள்ளம், நிலச்சரிவு என மோசமான பருவநிலைகள் அதிகரித்துள்ளன. இது பருவநிலை மாற்றத்தின் தெளிவான அறிகுறிகள். இது போன்ற பருவநிலை சம்பவங்களை குறைக்க, நாம் இயற்கையுடன் இணக்கமாக வாழ வேண்டும். நமது வளர்ச்சி தேவைகளை சுற்றுச்சூழலுடன் சமநிலைப்படுத்த வேண்டும். சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும். நிலையான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டால் தான் அர்த்தமுள்ள வளர்ச்சி சாத்தியம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நிலையான நடைமுறையை பின்பற்ற மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
இயற்கையை நாம் கவனித்துக் கொண்டால், பதிலுக்கு இயற்கை மனிதர்களை கவனித்துக் கொள்ளும்.
இவ்வாறு திரு. வெங்கையா நாயுடு பேசினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764533
(Release ID: 1764546)
Visitor Counter : 256