மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
குஜராத் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள நவா கிராமத்தில் சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளியின் புதிய கட்டிடம்: மத்திய அமைச்சர் அர்ப்பணிப்பு
Posted On:
17 OCT 2021 11:49AM by PIB Chennai
குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள நவா கிராமத்தில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாமந்திர் பள்ளியில், புதிய கட்டிடத்தை கனடாவில் உள்ள இந்திய குடும்ப சங்கம் மற்றும் உர்மிசரோஜ் அறக்கட்டளை கட்டியது. இதன் தொடக்க விழா இன்று மதியம் நடந்தது.
மாதவ் பிரயதாஸ்ஜி ஸ்வாமி முன்னிலையில், வகுப்பறைகள் பாய் ஸ்ரீ ரமேஷ் ஓஜாவால் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு பர்சோத்தம் ரூபாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் எம் திரு ராம்பாய் மொக்ரியா மற்றும் சௌராஷ்டிரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நிதின் பெதானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிகவும் பின்தங்கிய வாடி சமுதாய மாணவர்களுக்காக இந்த பள்ளி கட்டிடடம் உர்மிசரோஜ் அறக்கட்டளையால் கட்டி கொடுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு நவா கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், வாடி சமுதாய குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வசதிகள் கிடைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதையடுத்து உர்மிசரோஜ் அறக்கட்டளையின் திரு ஜகதீஷ்பாய் உடனடியாக இந்த பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளார்.
அனைவருடனும், அனைவரது வளர்ச்சி, அனைவரது முயற்சி’ என்பதற்கு சரஸ்வதி வித்யாமந்திர் உண்மையான உதாரணமாக உள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764483
(Release ID: 1764506)
Visitor Counter : 179