பாதுகாப்பு அமைச்சகம்

இங்கிலாந்தில் நடைபெற்ற கேம்ப்ரியன் ரோந்து பயிற்சியில் இந்திய ராணுவ அணி தங்கப்பதக்கம் வென்றது

Posted On: 16 OCT 2021 2:05PM by PIB Chennai

2021 அக்டோபர் 13 முதல் 15 வரை இங்கிலாந்தில் உள்ள வேல்ஸில் இருக்கும் பிரெகானில் நடைபெற்ற புகழ்பெற்ற கேம்ப்ரியன் ரோந்துப் பயிற்சியில் இந்திய ராணுவத்தின் சார்பாக கலந்து கொண்ட 4/5 கோர்கா ரைபிள்ஸ் (எல்லைப்புறப் படை) அணிக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது

இங்கிலாந்து ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எக்ஸ் கேம்ப்ரியன் ரோந்து, சகிப்புத்தன்மை மற்றும் குழு உணர்வின் உச்சக்கட்ட சோதனை களமாக கருதப்படுவதோடு ராணுவ ரோந்து ஒலிம்பிக் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற இந்திய ராணுவ அணி, உலகெங்கிலும் உள்ள சிறப்பு படைகள் மற்றும் மதிப்புமிக்க படைப்பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 17 சர்வதேச அணிகளை உள்ளடக்கிய மொத்தம் 96 அணிகளுக்கு எதிராக போட்டியிட்டது.

பயிற்சியின் போது, ​​கடுமையான நிலப்பரப்பு மற்றும் சீரற்ற குளிர் காலநிலைகளின் கீழ் அணிகள் தங்கள் செயல்திறனை வெளிப்படுத்தின. போர் சூழல்களில் ஏற்படக்கூடிய பல்வேறு சவால்களை சார்ந்து அவர்களது செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டன.

சிறப்பான போக்குவரத்து திறன்கள், ரோந்து உத்தரவுகளை செயல்படுத்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றில் இந்திய ராணுவ அணி அனைத்து நீதிபதிகளிடம் இருந்தும் அதிக பாராட்டுக்களை பெற்றது.

பிரிட்டிஷ் ராணுவ படையின் தலைவர் ஜெனரல் சர் மார்க் கார்லெட்டன்-ஸ்மித் 15 அக்டோபர் 2021 அன்று நடைபெற்ற விழாவில் இந்திய குழுவினருக்கு தங்கப் பதக்கத்தை வழங்கினார்.

இந்த ஆண்டு பங்கேற்ற 96 அணிகளில், மூன்று சர்வதேச ரோந்துப் படையினருக்கு மட்டுமே இந்தப் பயிற்சியின் 6-வது கட்டம் வரை தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=17643339

------



(Release ID: 1764359) Visitor Counter : 213