நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசியத் தலைநகர் மண்டலம், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனைகளின் போது இறக்குமதிக்கான மதிப்புக் குறைக்கப்பட்ட ஏராளமான ரசீதுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன

Posted On: 16 OCT 2021 11:31AM by PIB Chennai

தேசியத் தலைநகர் மண்டலம், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் மடிக்கணினிகள், செல்பேசிகள் மற்றும் அவற்றின் பாகங்களை இறக்குமதி செய்யும், வியாபாரம் செய்யும் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையின் போது மதிப்புக் குறைக்கப்பட்ட ரசீதுகள் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் பற்றிய  தவறான தகவல்கள், போலியான ஆவணங்கள் மற்றும் நாட்குறிப்புகள், டிஜிட்டல் ஆதாரங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

‘எச்டிஎம்ஐ கேபிள்ஸ்’  என்ற நிறுவனம் ரூ.3.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக கணக்கில் கொண்டுவந்துள்ளது. ஆனால் அது ரூ.64 கோடி மதிப்புள்ள மடிக்கணினிகள், செல்பேசிகள் போன்றவற்றை இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

இந்த சோதனையின் போது ரூ.2.75 கோடி கணக்கில் வராத ரொக்கத் தொகை  பறிமுதல்செய்யப்பட்டது

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764307

-------


(Release ID: 1764332) Visitor Counter : 241