பாதுகாப்பு அமைச்சகம்
டிஆர்டிஓ-வின் கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ‘டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிரேரனா மையம்’ திறக்கப்பட்டது
Posted On:
15 OCT 2021 2:15PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினத்தை முன்னிட்டும், நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை குறிக்கும் விதமாகவும், விசாகப்பட்டிணத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் 2021 அக்டோபர் 15 அன்று ‘டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிரேரனா மையம்’ திறக்கப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னணி கடற்படை ஆய்வகமாக கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் விளங்குகிறது. டாக்டர் கலாமின் சிலை ஒன்றையும் டிஆர்டிஓ தலைமை இயக்குநர் (கடற்படை அமைப்புகள் & பொருட்கள்) டாக்டர் சமீர் வி காமத் திறந்து வைத்தார்.
கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் தயாரிப்புகளான வருணாஸ்திரா, டோர்பேடோ அட்வான்ஸ்ட் லைட் மற்றும் மாரீச் டெகாய் ஆகியவை வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, ஆராய்ச்சி & மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும், பொதுமக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகளை டிஆர்டிஓ எடுத்து வருகிறது.
டாக்டர் கலாமின் வாழ்க்கை மற்றும் அவரது அரிய சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிரேரனா மையம், பொதுமக்களை, குறிப்பாக இளம் மனங்களை, ஊக்குவிக்கும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764149
***
(Release ID: 1764223)