நிலக்கரி அமைச்சகம்
ஒடிசாவிலுள்ள NLCIL தலாபிரா சுரங்கத்தில் இருந்து NTPC தார்லிபாலி மின் நிலையத்துக்கு நிலக்கரி விநியோகம் தொடங்கியது.
Posted On:
15 OCT 2021 1:47PM by PIB Chennai
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனம் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படும் நவரத்னா நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஓடிசா மாநிலத்தில் தலாபிரா II&III நிலக்கரி சுரங்கங்களை (ஆண்டிற்கு 20 மெட்ரிக் டன் கொள்ளளவு ) செயல்படுத்தி வருகிறது.
தலாபிரா II&III OCP 2020-21 நிதி ஆண்டிலிருந்து உற்பத்தியை தொடங்கி, அதன் கடைசி பயன்பாட்டு தொழிற்சாலையான NTPL, தூத்துக்குடி, தமிழ்நாடு மின் நிலையம் வரை நிலக்கரியை வழங்கி வருகிறது. நாட்டின் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தனது கடைசி பயன்பாட்டு தொழிற்சாலையின் தேவையை பூர்த்தி செய்த பிறகு எஞ்சியிருக்கும் நிலக்கரி, அமைச்சகத்தின் உரிய அனுமதியுடன் மின்னணு – ஏலம் மூலம் வெளிச்சந்தைக்கு விற்கப்படுகிறது.
நாட்டின் மின் துறைக்கு தேவையான நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க நிலக்கரி அமைச்சகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. நிலக்கரி தொகுப்புகளில் இருந்தும் மின் துறைக்கு நிலக்கரி விநியோகத்தை திசை திருப்பவும் மற்றும் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலாபிரா II மற்றும் III-சுரங்கங்களிலிருந்து NTPC-இன் மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் செய்ய அமைச்சகம் அனுமதித்துள்ளது. இதன் படி தலாபிரா II&III OCP சுரங்கங்களிலிருந்து NTPC-இன் (தார்லிபாலி & லாரா மின் நிலையங்கள்) மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகம் தொடங்கியுள்ளது.
சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட ஆதரவு மற்றும் விநியோக அனுமதிகள் மூலம் இது சாத்தியமாகி உள்ளது. மத்திய சுரங்கத்துறை மற்றும் ஒடிசா மாநில அரசுகளின் அனுமதியினால் தார்லிபாலி மின் நிலையத்திற்கு நேற்று முதல் நிலக்கரி விநியோகம் தொடங்கியுள்ளது மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் வழிக்காட்டுதலின்படி 24 மணி நேரத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
***
(Release ID: 1764212)