கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகத்தின் கன்டெய்னர் போக்குவரத்து 40.40 சதவீதம் அதிகரிப்பு

प्रविष्टि तिथि: 14 OCT 2021 1:02PM by PIB Chennai

நாட்டின் முன்னணி துறைமுகங்களில் ஒன்றான, ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகம், இந்த நிதியாண்டின் முதல் பாதியில்  2,703,051 கன்டெய்னர்களை கையாண்டுள்ளது. இது கடந்தாண்டின் இதே காலத்தில் கையாண்ட கன்டெய்னர்களை விட 40.40 சதவீதம் அதிகம். அப்போது 19, 25,284 கன்டெய்னர்களை ஜவஹர்லால் நேரு துறைமுகம் கையாண்டுள்ளது.

2021-22ம் நிதியாண்டின் முதல் பாதியில் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட கன்டெய்னர் போக்குவரத்து 18.04 சதவீதம்.

இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் கையாளப்பட்ட மொத்த கன்டெய்னர்களின் எண்ணிக்கை 4,52,108. இது கடந்தாண்டின் இதே மாதத்தை விட 18.86 சதவீதம் அதிகம். 

அரையாண்டு செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழக தலைவர் திரு சஞ்சய் சேதி, உலகளாவிய துறைமுகங்களில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு இணையாக, வசதிகளை உறுதி செய்ய ஜவஹர்லால் நேரு துறைமுக பொறுப்புக் கழகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

ஜவஹர்லால் நேரு துறைமுகத்திலிருந்து சமீபத்தில் தொடங்கப்பட்ட இரட்டை அடுக்கு கன்டெய்னர் ரயில் சேவை, ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை ரயில் போக்குவரத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதில் முக்கியமான நடவடிக்கையாகும்.  இது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு மலிவான சரக்கு போக்குவரத்து வசதியை அளிக்கிறது.  ஜவஹர்லால் நேரு துறைமுகத்தின், செயல்பாடுகளை, உடனுக்குடன் அறிய ஜேஎன்பி-சிபிபி செயலி தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763833

***


(रिलीज़ आईडी: 1763962) आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi