சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்
Posted On:
14 OCT 2021 9:22AM by PIB Chennai
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 96.82 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 18,987 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.07 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இதுவே அதிகமான அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 19,808 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,33,62,709 என அதிகரித்துள்ளது.
கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் தற்போது 0.61 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,06,586; கடந்த 215 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.
வாராந்திர பாதிப்பு விகிதம் (1.44 சதவீதம்) கடந்த 111 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் (1.46 சதவீதம்) கடந்த 45 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 58.76 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
****
(Release ID: 1763934)
Visitor Counter : 192