வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் 2021 செப்டம்பர் மாதத்துக்கான மொத்த விலை குறியீடு எண்கள் ( அடிப்படை 2011-12=100) வெளியீடு

प्रविष्टि तिथि: 14 OCT 2021 12:00PM by PIB Chennai

இந்தியாவில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்(தற்காலிகம்) மற்றும் ஜூலை மாதத்துக்கான(இறுதி) மொத்தவிலை குறியீட்டு எண்களை( அடிப்படை ஆண்டு: 2011-12)  தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.  நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் தரவுகள் அடிப்படையில் மொத்தவிலை குறியீடுகளின் தற்காலிக எண்கள் ஒவ்வொரு மாதமும் 14ம் தேதி (அல்லது அடுத்த வேலை நாளில்) இரண்டு வார கால தாமத்துடன் வெளியிடப்படுகிறது. 10 வாரங்களுக்குப்பின், இந்த விலைக் குறியீடு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும். 

2021 செப்டம்பர் மாதத்துக்கான ஆண்டு பணவீக்க விகிதம் 10.66 சதவீதம்.  2020 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 1.32 சதவீதமாக இருந்தது.    கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்கள், உணவு அல்லாத பொருட்கள்பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் ரசாயனங்கள் மற்றும் ரசாயன தயாரிப்புகளின் விலை அதிகரிப்பு 2021 செப்டம்பரில்  பணவீக்கம் மிகவும் அதிகரித்ததற்கு முக்கிய காரணம். மொத்தவிலை குறியீட்டு எண்களின் ஆண்டு மாற்றம் மற்றும் கடந்த 3 மாதங்களில் பணவீக்கம் ஆகியவை கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763814

***


(रिलीज़ आईडी: 1763890) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी