பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவத்தில் பெண்களின் பங்கு குறித்த கருத்தரங்கில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்ற உள்ளார்

Posted On: 13 OCT 2021 4:16PM by PIB Chennai

2021 அக்டோபர் 14 அன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்பாடு செய்யும் ராணுவத்தில் பெண்களின் பங்கு குறித்த இணைய கருத்தரங்கில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் துவக்கவுரையாற்ற உள்ளார். காணொலி மூலம் நடைபெற உள்ள இந்த சர்வதேச இணைய கருத்தரங்கை பாதுகாப்பு அமைச்சகம் நடத்துகிறது. 

பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உரையாற்றுவார். தாக்குதல் நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு குறித்த வரலாற்றுப் பூர்வமான பார்வை எனும் அமர்வுக்கு ஐ டி எஸ் (மருத்துவம்) துணை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மாதுரி கனித்கர் தலைமை வகிப்பார்.

போர்களின் மாறிவரும் போக்கு மற்றும் பெண் வீரர்களின் உத்தேச பங்களிப்புகள் குறித்த அமர்வுக்கு முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் திருமதி நிருபமா ராவ் மேனன் தலைமை வகிப்பார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த இணைய கருத்தரங்கில் தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வார்கள்.

இரண்டு அமர்வுகளுடன் கூடிய இந்த கருத்தரங்கில் 'பெண்களின் பங்கு குறித்த வரலாற்றுப் பூர்வமான பார்வை' முதலாவதாக இருக்கும். இந்தியாவைத் தவிர, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்வார்கள்.

போர்களின் மாறிவரும் போக்கு மற்றும் பெண் வீரர்களின் உத்தேச பங்களிப்புகள் குறித்த அமர்வில், பாகிஸ்தான், ரஷ்யா கூட்டமைப்பு, உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய இந்தியாவின் முப்படைகளிலும் பெண்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763612

*******


(Release ID: 1763700) Visitor Counter : 215


Read this release in: English , Urdu , Hindi , Telugu