பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அமெரிக்க கடற்படை தலைவர் அட்மிரல் மைக்கேல் கில்டே இந்தியா வருகை

Posted On: 12 OCT 2021 9:51AM by PIB Chennai

அமெரிக்க கடற்படையின் கடற்படை நடவடிக்கைகள் தலைவரான அட்மிரல் மைக்கேல் கில்டே அக்டோபர் 11-15 முதல் ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.

இந்திய கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் இதர உயர் அதிகாரிகளுடன் ​அட்மிரல் கில்டே உரையாடவுள்ளார். இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை தளம் (மும்பை) மற்றும் கிழக்கு கடற்படை தளம் (விசாகப்பட்டினம்) ஆகியவற்றை அட்மிரல் கில்டே பார்வையிட்டு, அவற்றின் தளபதிகளுடன் உரையாடவுள்ளார்.

இந்தியாவும் அமெரிக்காவும் பாரம்பரியமாக நெருக்கமான  நட்புறவுகளைப் பேணி வருகின்றன. இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு துறை உறவு பரஸ்பர நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததாகும், ஜூன் 16 அன்று இந்தியாவுக்கு முக்கிய 'பாதுகாப்பு பங்குதாரர்அந்தஸ்து வழங்கப்பட்ட பிறகு இது இன்னும் வலுப்பட்டுள்ளது.

மேலும், சில அடிப்படை ஒப்பந்தங்களை இரு நாடுகளும் நிறைவேற்றியுள்ளன. 2015-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம், 2016-ல் கையெழுத்திடப்பட்ட சரக்கு பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763116

----(Release ID: 1763260) Visitor Counter : 213