ரெயில்வே அமைச்சகம்

வடகிழக்குப் பகுதியில் ரயில் வழித்தடம் மின்மயமாக்கல் ஊக்குவிப்பு

Posted On: 11 OCT 2021 12:13PM by PIB Chennai

2023-24ஆம் ஆண்டுக்குள் அகலப்பாதை வழித்தடம் முழுவதையும் மின்மயமாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சப்படும்.

இதன் தொடர்ச்சியாக வடகிழக்கு ரயில்வே, கதிகார் முதல் குவஹாத்தி வரை 649 கிலோமீட்டர் தூர வழித்தடத்தில் மின்மயமாக்கும் பணியை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் முக்கிய நகரங்கள் குவஹாத்தியுடன் இணைக்கப்படும். இறுதிக்கட்டப் பணியாக 107 கிலோமீட்டர் தூரத்திற்கான மின்மயமாக்கல் பணி கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஆய்வு செய்யப்பட்டது. இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் மற்றும் அதிவேக சரக்கு ரயில்கள் இயக்க முடியும். இதன் மூலம் குவஹாத்தி மற்றும் கதிகார் இடையிலான பயண நேரம் இரண்டு மணி நேரம் குறையும். ரயில்களையும் அதிவேகத்தில் இயக்க முடியும்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762874

                                                                                                    ------



(Release ID: 1763022) Visitor Counter : 179