தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையத்தை (C-DOT ) பார்வையிட்டார் தொலை தொடர்புத்துறை செயலாளர் திரு. கே ராஜாராமன்: எதிர்கால குவாண்டம் தகவல் தொடர்பு ஆய்வகத்தையும் தொடங்கி வைத்தார்
Posted On:
10 OCT 2021 9:19AM by PIB Chennai
தில்லியில் உள்ள டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையத்தை (C-DOT ) தொலை தொடர்பு துறை செயலாளர் திரு.கே. ராஜாராமன் நேற்று பார்வையிட்டார். டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம், தொலை தொடர்பு துறையின் முன்னணி ஆராய்ச்சி மையம். டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் மூத்த அதிகாரிகளுடன் திரு.கே.ராஜாராமன் கலந்துரையாடி, டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் உருவாக்கிய திட்டங்களை ஆய்வு செய்தார். சி-டாட் மையத்தின் நடவடிக்கைகள் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜ்குமார் உபாத்யாய் விளக்கினார். அதைத் தொடர்ந்து சி-டாட் மையத்தின் 4ஜி/5ஜி, ஜிபான், என்கிரிப்டர்ஸ், ரூட்டர்ஸ், வைபை, சைபர் பாதுகாப்பு ஆய்வகங்களையும் அவர் பார்வையிட்டார். பல ஆய்வு திட்டங்களில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்களை அவர் ஊக்குவித்தார். பெங்களூரில் உள்ள சி-டாட் மைய அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொலை தொடர்பு துறையில் தற்சார்பு இலக்கை அடைய முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என சி-டாட் பொறியாளர்களை திரு ராஜா ராமன் கேட்டுக் கொண்டார். தொலை தொடர்பு துறையில் தற்சார்பு நிலையை அடைய சி-டாட் மையத்தின் பங்களிப்பை அவர் பாராட்டினார். சி-டாட் மையத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக அவர் உறுதியளித்தார். உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பம் மற்றும் தற்போது நடைபெறும் 5ஜி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றில் சி-டாட்-ன் முக்கிய பங்கை அவர் பாராட்டினார். 6ஜி மற்றும் இதர எதிர்கால தொழில்நுட்பத்துக்கான பணிகளையும் சி-டாட் தொடங்கும்படி அவர் வலியுறுத்தினார்.
சி-டாட் மையத்தின் பங்களிப்புகள் தேசிய மற்றும் சர்வதே தரத்தில் இருப்பதில் கவனம் செலுத்தும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
தில்லி சி-டாட் மையத்தில், குவாண்டம் தகவல் தொடர்பு ஆய்வகத்தையும் திரு கே. ரங்கராஜன் தொடங்கி வைத்தார். உள்நாட்டில் உருவாக்கப்பட்ட குவாண்டம் முக்கிய விநியோக (QKD) தீர்வையும் அவர் வெளியிட்டார். இது கண்ணாடியிழை கேபிளில் 100 கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்துக்கு ஆதரவாக உள்ளது. குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் வேகமாக முன்னேற்றம், தற்போதைய தகவல் தொடர்பு நெட்வொர்க் மூலம், பல முக்கியமான துறைகளால் கொண்டு செல்லப்படும் தரவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்ள உள்நாட்டு குவாண்டம் விநியோக தீர்வு அவசியம். தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் பாதுகாப்புத்துறைக்கு தேவையான குவாண்டம் பாதுகாப்பு தொலைதொடர்பு தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை இந்தியாவில் வழங்கும் முதல் நிறுவனமாக சி-டாட் மையம் உருவாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762590
*****
(Release ID: 1762680)
Visitor Counter : 268