ஆயுஷ்
ஆயுஷ் அடிப்படையிலான தொழில்களின் வளர்ச்சிக்கு வடகிழக்கு பகுதி சிறந்த வளங்களை கொண்டுள்ளது : திரு.சர்பானந்தா சோனோவால்
Posted On:
09 OCT 2021 7:29PM by PIB Chennai
நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு மிகச்சிறந்த ஆற்றல் வடகிழக்கு பகுதியில் உள்ளது என ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறினார்.
மேகாலயாவின் ரீ பாய் மாவட்டத்தில் உள்ள உமியாம் என்ற இடத்தில் ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதியின் வடகிழக்கு மையத்தில், நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறியதாவது:
இந்த பகுதியில் உள்ள தாவரங்களின் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய மருந்துகளின் வளம், ஆகியவை ஆயுஷ் அடிப்படையிலான தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். வடகிழக்கு பகுதியின் பொருளாதாரத்தை அதிகரிக்க மத்திய அரசு உறுதியுடன் செயல்படுகிறது. இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சியின் தளமாக வடகிழக்கு மாநிலங்கள் இருக்கும். இப்பகுதி மாணவர்களுக்கு தரமான கல்வி அவசியம். இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக வடகிழக்கு பகுதியை மாற்ற மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
இவ்வாறு திரு சர்பானந்தா சோனோவால் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
*****************
(Release ID: 1762533)
Visitor Counter : 216