தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மும்பையில் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் திட்டத்துக்கான சீர்மிகு தேசிய மையம் (NCoE AVGC): இடத்தை பார்வையிட்டார் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர்
Posted On:
08 OCT 2021 3:48PM by PIB Chennai
மும்பையில் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் திட்டத்துக்கான சீர்மிகு தேசிய மையம் (NCoE AVGC) அமையவுள்ள இடத்தை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா ஐஏஎஸ் பார்வையிட்டு, பலதரப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.
அவர் 2 நாள் பயணமாக மும்பை சென்றுள்ளார். மும்பையில் திரைப்பட நகருக்கு அருகே 20 ஏக்கர் நிலத்தை, அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் திட்டத்துக்கான சீர்மிகு தேசிய மையத்துக்கு மகாராஷ்டிரா அரசு ஒதுக்கியுள்ளது. இங்கு இந்த மையத்தை மும்பை ஐஐடியுடன் இணைந்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உருவாக்குகிறது. இது தொடர்பாக மும்பை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் சுபாசிஸ் சவுத்திரியிடம், திரு அபூர்வ சந்திரா விரிவான ஆலோசனை நடத்தினார்.
இந்த மையம் திரைப்படத்துறையில் திறன் மேம்பாட்டுக்காவும், தரமான கல்வியை வழங்குவதற்காகவும், சினிமாத்துறையில் சிறிய நிகழ்ச்சிகளை எடுப்பதற்காகவும் தொடங்கப்படுகிறது.
இந்தியா மற்றும் உலகளாவிய பொழுதுபோக்குத் துறைக்கு, உலகத்தரத்திலான திறமையாளர்களை உருவாக்கும் நோக்கில் இந்த அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் திட்டத்துக்கான சீர்மிகு தேசிய மையம் (NCoE AVGC) அமைக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762119
*****************
(Release ID: 1762247)
Visitor Counter : 188