நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏர் இந்தியா விற்பனைக்கு மத்திய அரசு ஒப்புதல்: ஏலத்தில் வென்றது டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம்

Posted On: 08 OCT 2021 4:51PM by PIB Chennai

மத்திய அரசிடம் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை டாடா சன்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் துணை நிறுவனமான தலாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அதிகபட்சமாக கேட்கப்பட்ட ஏலத்துக்கு விற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோர் அடங்கிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது ஏர்இந்தியா மாற்று வழிமுறைக்காக (AISAM), அமைக்கப்பட்ட அதிகாரம் பெற்ற குழு.   ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை வாங்க கேட்கப்பட்ட ஏலத்தொகை ரூ.18,000 கோடி. இந்த பரிவர்த்தனையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் அடங்கவில்லை. இதற்கான மதிப்பு ரூ.14,718 கோடி மத்திய அரசின்  ஏர் இந்தியாவின் சொத்து நிறுவனத்துக்கு (AIAHL) மாற்றப்படும்.

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களை விற்பதற்கான நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதலுடன் தொடங்கியது.

1. டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான தலாஸ் பிரைவேட் லிமிடெட், ரூ.18,000 கோடிக்கு ஏலம் கேட்டது.

2. திரு அஜய் சிங் தலைமையிலான கூட்டமைப்பு ரூ.15,100 கோடிக்கு ஏலம் கேட்டது.

இந்த இரு ஏலங்களும், ஒதுக்கீட்டு விலையான ரூ.12,906 கோடியைவிட அதிகம்.

*****************


(Release ID: 1762237) Visitor Counter : 348