நிதி அமைச்சகம்
அசாம், மேகாலயா மற்றும் மேற்கு வங்கத்தில் வருமான வரித்துறை தேடுதல் நடவடிக்கை
प्रविष्टि तिथि:
08 OCT 2021 2:36PM by PIB Chennai
வடகிழக்கு பிராந்தியம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு குழுமங்களில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை வருமான வரித்துறை 2021 அக்டோபர் 5 அன்று மேற்கொண்டது.
இதில் ஒரு குழுமத்தின் முக்கிய நிறுவனத்திற்கு சாதகமாக கணக்கில் வராத பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்காக பல்வேறு போலி நிறுவனங்களை குழுமம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மூலம் ரூ 50 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
பழங்குடியினரை கடன் வழங்குபவர்களாக தவறாக காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. சுமார் ரூ 38 கோடிக்கு இவ்வாறு காட்டப்பட்டுள்ளது.
மற்றொரு குழுமம் அசாம், மிசோராம் மற்றும் வட கிழக்கின் இதர பகுதிகளில் ரயில்வே ஒப்பந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரூ 110 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் சொத்து விற்பனை தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கான நிதி ஆதாரத்தை விளக்க குழுமத்தால் முடியவில்லை. மேலும் ரூ 13 கோடி மதிப்பிலான சொத்து விற்பனையை பண பரிவர்த்தனை வாயிலாக நடத்தியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ரூ 250 கோடி மதிப்பிலான கணக்கில் வராத வருவாய் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது கண்டறியப்பட்டு, ரூ 51 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒன்பது வங்கி லாக்கர்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.
மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1762084
*****************
(रिलीज़ आईडी: 1762176)
आगंतुक पटल : 269