ஆயுஷ்
ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி உற்பத்தியாளர்களுக்கு உரிமம் வழங்குவதற்கான செயல்முறை விரைவானதாக, காகிதமற்றதாக மற்றும் மிகவும் வெளிப்படையானதாக மாறியுள்ளது
Posted On:
08 OCT 2021 2:55PM by PIB Chennai
விண்ணப்ப செயல்முறையை ஆன்லைன் மயமாக்கி இருப்பதன் மூலம் ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி உற்பத்தியாளர்களுக்கு உரிமம் வழங்குவதற்கான நடைமுறையை விரைவானதாக, காகிதமற்றதாக மற்றும் மிகவும் வெளிப்படையானதாக ஆயுஷ் அமைச்சகம் மாற்றியுள்ளது.
உரிமம் வழங்கும் அலுவலகத்திற்கு நேரில் செல்லும் சிரமமில்லாமல் www.e-aushadhi.gov.in எனும் இணைய முகவரியின் வாயிலாக உற்பத்தியாளர்கள் தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தங்களது உரிமத்தை செல்லத்தக்கதாக வைத்திருக்க நல் உற்பத்தி செயல்முறைகள் சான்றிதழை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை விண்ணப்பதாரர்கள் புதுப்பிக்க வேண்டும். ரூ 1000 கட்டணம் செலுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி உற்பத்தி மையங்களில் ஆய்வு நடத்தப்படும். உரிமத்தின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், உரிம கட்டணமும் எந்த எண்ணிக்கையிலும் பொது ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருந்துகளுக்கு ரூ 1,000-த்தில் இருந்து ரூ 2,000 ஆகவும், 10 தனியுரிமை ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருந்துகளுக்கு ரூ 3000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
உரிமங்களை வழங்குவதற்கான அதிகபட்ச காலத்தை மூன்று மாதங்களில் இருந்து இரண்டு மாதங்களாக அமைச்சகம் குறைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1762094
*****************
(Release ID: 1762158)
Visitor Counter : 223