சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்
Posted On:
08 OCT 2021 9:07AM by PIB Chennai
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 93.17 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவிதத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது 0.71 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல், இது மிகக் குறைந்த அளவு.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,40,221; கடந்த 205 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.96 சதவீதம்; கடந்த 2020 மார்ச் முதல் இது அதிகமான அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 24,963 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,32,25,221
வாராந்திர பாதிப்பு விகிதம் (1.64 சதவீதம்) கடந்த 105 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் (1.53 சதவீதம்) கடந்த 39 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 58 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1761947
(Release ID: 1762012)
Visitor Counter : 218