குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வடகிழக்கு பிராந்தியத்தின் வளமான உயிர் வளங்கள் மற்றும் கால்நடைகளை பராமரிக்கவும் பாதுகாக்கவும் புதுமையான ஆராய்ச்சியுடன் வாருங்கள் - விஞ்ஞானிகளுக்கு துணை ஜனாதிபதி அழைப்பு

Posted On: 07 OCT 2021 2:42PM by PIB Chennai

 குடியரசு துணைத்தலைவர், திரு. எம். வெங்கையா நாயுடு இன்று இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - நாகாலாந்தின் திமாபூரில் உள்ள மிதுன் (மாடுகள்) தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு சென்றார். அங்கு வடகிழக்கு பிரதேசத்தின் வளமான உயிர் வளங்கள் மற்றும் கால்நடைகளை பராமரிக்கவும் பாதுகாக்கவும் புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

வடகிழக்கு மலைப் பிரதேசத்திற்கான இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மிதுன் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி வளாகத்தின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் நேரடியாக உரையாடினார். அப்போது வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் விவசாயத்தில் நவீனமயமாக்கல் பணிகளை மேற்கொள்ள விஞ்ஞானிகளை அவர் வலியுறுத்தினார்.

இந்த சந்தர்ப்பத்தில், மிதுன் விவசாயிகளுக்கு (மாடு வளர்ப்போர்) பகுதி நேரம் திறந்தவெளியிலும், பகுதி நேரம் கொட்டிலுக்குள்ளும் வளர்ப்பது குறித்த விளம்பர வீடியோவை  குடியரசு துணைத் தலைவர் காட்சிப்படுத்தினார். மிதுனுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தை மிதுனை வளர்ப்பதற்கான பகுதி நேரம் திறந்தவெளியிலும், பகுதி நேரம் கொட்டிலுக்குள்ளும் வளர்க்கும் அமைப்புகளின் கீழ் கொண்டு வந்ததற்காக பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் பிரம்மாண்டமான விலங்குகளைப் பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் இந்த மையம் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது என்றார்.

நாகாலாந்து மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் இம்மாநில விலங்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், படித்த இளைஞர்கள் விலங்குகளை பாதுகாப்பதில் ஈர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

வடகிழக்கு மலை பிரதேசத்திற்கான (NEH) ICAR ஆராய்ச்சி வளாகத்தை 56 பயிர் வகைகளின் வளர்ச்சி உட்பட பல குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு பாராட்டிய திரு. நாயுடு, பயிர், கால்நடை, கோழி, மீன்வளம் மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விவசாய முறைகளை ஊக்குவிப்பதில் நிறுவனத்தின் முக்கியத்துவம் பாராட்டுக்குரியது என்றார்.

வடகிழக்கு பிரதேசத்தில் 70% க்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை நேரடியாகச் சார்ந்து இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், காலநிலை- மாற்றம் மற்றும் கலாச்சார ரீதியாக இப்பகுதி பழங்குடி கலாச்சாரங்களுடன் ஒத்திசைவா நிலையான, குறிப்பிட்ட தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்காக வேலை செய்ய அறிவியல் நிறுவனங்களை  வலியுறுத்தினார்.

*************



(Release ID: 1761910) Visitor Counter : 164