ரெயில்வே அமைச்சகம்
இந்திய ரயில்வேயின் செப்டம்பர் 2021 சரக்குப் போக்குவரத்தும் அதன் மூலம் கிடைத்த வருவாயும் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளன
प्रविष्टि तिथि:
07 OCT 2021 4:48PM by PIB Chennai
செப்டம்பர், 2021 இல், இந்திய ரயில்வே 106 மில்லியன் டன் சரக்குப் போக்குவரத்தைக் கையாண்டது. இது சென்ற ஆண்டின் இதே காலத்துடன் (102.30 மில்லியன் டன்) ஒப்பிடுகையில் 3.62 % அதிகமாகும்.
இந்த காலகட்டத்தில், இந்திய ரயில்வே, சரக்கு போக்குவரத்து கையாண்டதன் மூலம் 10815.73 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்திற்கான வருவாயுடன் ஒப்பிடும்போது (ரூ. 9905.69 கோடி) 9.19% அதிகமாகும்.
செப்டம்பர், 2021 இல், இந்திய ரயில்வே சரக்குப் போக்குவரத்து 106 மில்லியன் டன்களாக இருந்தது. இதில் 47.74 மில்லியன் டன் நிலக்கரி, 11.24 மில்லியன் டன் இரும்புத் தாது, 6.46 மில்லியன் டன் உணவு தானியங்கள், 4.19 மில்லியன் டன் உரங்கள், 3.60 மில்லியன் டன் கனிம எண்ணெய் மற்றும் 6.15 மில்லியன் டன் சிமென்ட் (கிளிங்கர் தவிர).
-----
(रिलीज़ आईडी: 1761908)