எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச மின் துறையில் ஒத்துழைப்புக்காக பிரெஞ்சு பன்னாட்டு மின்சார பயன்பாட்டு நிறுவனத்துடன் தேசிய அனல் மின் நிறுவனம் ஒப்பந்தம்

Posted On: 07 OCT 2021 1:34PM by PIB Chennai

மின் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், பிரெஞ்சு பன்னாட்டு மின்சார பயன்பாட்டு நிறுவனம் (EDF), பிரான்சின் பாரிஸில் தலைமையிடமாக உள்ள உலகின் முன்னணி மின் துறை நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம் மத்திய கிழக்கு, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் சாத்தியமான மின் திட்ட மேம்பாட்டு வாய்ப்புகளை ஆராய இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றல் ஒருங்கிணைந்த நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்துடன் (NTPC) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தேசிய அனல் மின் நிலையம் பிளாட் டாப் 250 உலகளாவிய எரிசக்தி நிறுவன தரவரிசையில் 2 வது சுதந்திர மின் உற்பத்தியாளராக (ஐபிபி) தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள மின் திட்ட மேம்பாட்டு வாய்ப்புகளை ஆராய EDF, பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி நிறுவனமான NTPC ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சாட்சியமளிக்கும்.

இரண்டு நிறுவனங்களும் துறைசார்ந்த அறிவு பகிர்வு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஆலோசனை பணிகளுக்கு உலகளாவிய ஒத்துழைப்புடன் EDF மற்றும் NTPC ஆகியவை பரஸ்பர ஆர்வமுள்ள நாடுகளில் மின் திட்ட மேம்பாட்டுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதுடன், அறிவுப்பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் ஆராயும்.

***


(Release ID: 1761883)
Read this release in: English , Urdu , Hindi , Telugu