பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-இலங்கை ராணுவம் இடையே ‘மித்ர சக்தி’ கூட்டு பயிற்சி தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2021 7:38PM by PIB Chennai

இந்தியா-இலங்கை ராணுவம் இடையே 8வதுமித்ர சக்திகூட்டு பயிற்சி இலங்கையின் அம்பாரா பகுதியில் தொடங்கியது. அக்டோபர் 4 முதல் 15ம் தேதி வரை இந்த கூட்டு பயிற்சி நடக்கிறது.

இந்திய ராணுவத்தின் காலாட் படைப்பிரிவில் இருந்து 120 வீரர்களும், இலங்கை ராணுவத்தின் இதே அளவிலான வீரர்களும் இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்கின்றனர். தீவிரவாத தடுப்பு பணி குறித்த பயிற்சியில், இரு நாட்டு ராணுவத்தினரும் ஈடுபடுவர்.

இந்த கூட்டு பயிற்சியை இந்தியா மற்றும் இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பார்வையிடுவர். இந்த பயிற்சியின் மூலம் இருநாட்டு ராணுவங்களும் தங்களது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும், இரு நாட்டு ராணுவத்தினர் இடையேயான ஒத்துழைப்பை மேப்படுத்துவதில் இந்த கூட்டு பயிற்சி முக்கியமானதாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761215

 


(வெளியீட்டு அடையாள எண்: 1761232) வருகையாளர் எண்ணிக்கை : 242
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी