பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்னணு ஓய்வூதிய உத்தரவு டிஜி லாக்கருடன் ஒருங்கிணைப்பு

प्रविष्टि तिथि: 05 OCT 2021 5:03PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களின் வாழ்வை எளிதாக்குவதற்காக, பாதுகாப்புத்துறை ஒய்வூதிய  கணக்குகளின் முதன்மை கட்டுப்பாட்டாளர்  (PCDA) உருவாக்கும் மின்னணு ஓய்வூதிய உத்தரவை, அலகபாத்தில் உள்ள டிஜி லாக்கருடன் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை ஒருங்கிணைத்துள்ளது

இதன் மூலம் பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்கள், டிஜி லாக்கரிலிருந்து ஓய்வூதிய உத்தரவை உடனடியாக பெற முடியும்இதன் மூலம் டிஜிலாக்கரில் ஓய்வூதிய வழங்கல் உத்தரவை நிரந்தரமாக பதிவு செய்ய முடியும் மற்றும் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உத்தரவு பெறுவதில் ஏற்படும் தாமதம் குறையும்

டிஜி லாக்கர் மூலம், 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு ஓய்வூதிய உத்தரவை வழங்க அலகாபாத்தில் உள்ள பிசிடிஏ(ஓய்வூதியம்) சேவை அளிப்பாளராக பதிவு செய்துள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்கள் உலகில் எங்கிருந்தும் மின்னணு ஓய்வூதிய உத்தரவை பெற முடியும். இதன் மூலம் பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்கள் 23 லட்சம் பேர் பயனடைவர்.

                                                                                                                                      -------

 


(रिलीज़ आईडी: 1761203) आगंतुक पटल : 424
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi