நிலக்கரி அமைச்சகம்

சொந்த சுரங்கங்களில் இருந்து 50% நிலக்கரி விற்பனைக்கான விதிகளை நிலக்கரி அமைச்சகம் அறிவிப்பு

Posted On: 05 OCT 2021 5:08PM by PIB Chennai

ஒரு நிதியாண்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த நிலக்கரி அல்லது பழுப்பு நிலக்கரியில் 50 சதவிகிதம் வரை சொந்த சுரங்கத்தின் குத்தகைதாரர் விற்பனை செய்ய அனுமதிக்கும் நோக்கில் கனிம சலுகை விதிகள் 1960- நிலக்கரி அமைச்சகம் திருத்தியுள்ளது. கூடுதல் கட்டணம் வழங்கப்படும் போது, சுரங்கத்தால் இணைக்கப்பட்டுள்ள ஆலையின் தேவையை பூர்த்தி செய்த பின்னர் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த விற்பனையை மேற்கொள்ளலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு & ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் இதற்காக திருத்தப்பட்டது. தனியார் மற்றும் பொதுத்துறையின் சொந்த சுரங்கங்களுக்கு இது பொருந்தும்.

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொகுதிகளின் சுரங்கத் திறன்களை அதிக அளவில் பயன்படுத்துவதன் வாயிலாக சந்தையில் கூடுதல் நிலக்கரி கிடைப்பதற்கு இந்த திருத்தம் வழி வகுத்துள்ளது, கூடுதல் நிலக்கரி கிடைப்பதால் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான அழுத்தம் குறையும் மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கு மாற்றாகவும் இது இருக்கும்.

சுரங்கத்தால் இணைக்கப்பட்டுள்ள ஆலையின் தேவையை பூர்த்தி செய்த பின்னரே நிலக்கரி அல்லது பழுப்பு நிலக்கரி விற்பனையை மேற்கொள்ளலாம் என்பதால், உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை ஊக்கமளிக்கும். மேலும், கூடுதல் தொகை, ராயல்டி உள்ளிட்டவற்றால் மாநில அரசுகளின் வருவாயும் அதிகரிக்கும்.

ஒரு வருடத்திற்கு 500 மில்லியனுக்கும் அதிகமான உச்ச திறன் கொண்ட 100-க்கும் மேற்பட்ட நிலக்கரி, பழுப்பு நிலக்கரி தொகுதிகள், மற்றும் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள மாநிலங்களுக்கு இந்த நடவடிக்கை நன்மை பயக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761144

-----



(Release ID: 1761201) Visitor Counter : 263