அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அதிக திறனுள்ள பேக்கிங் பொருட்கள் தயாரிக்க பயன்படும் புதிய மக்கும் பாலிமர் உருவாக்கம்
Posted On:
05 OCT 2021 1:28PM by PIB Chennai
கொத்தவரங்காய் பசை மற்றும் நண்டு, இறால் கூடு ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாலிசாக்ரைடுகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மக்கும் பாலிமரை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த பாலிமர் பிலிம் தண்ணீரை உறிஞ்சாது, அதிக பலம் கொண்டது. இதன் மூலம் தயாரிக்கப்படும் பேக்கிங் பொருட்கள், கடுமையான சூழல்களையும் சமாளிக்கும்.
பிளாஸ்டிக் குழைமங்கள் எதையும் பயன்படுத்தாமல் கொத்தவரங்காய் பசை, நண்டு, இறால் கூடுகளின் பாலிசாக்ரைடுகளை பயன்படுத்தி எளிய தொழில்நுட்பத்தில் இந்த பாலிமர் பிலிம்களை, அசாமில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு கழகத்தின் (IASST) பேராசிரியர் டாக்டர் தேவாசிஷ் சவுத்திரி, ஆய்வு மாணவர் சசாதூர் ரகுமான் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இந்த பாலிமர் பிலிம் 240 மணி நேரம் தண்ணீரில் ஊறினாலும், கரையவில்லை. இதன் மூலம் தயாரிக்கப்படும் பேக்கிங் பொருட்கள் மிகவும் வலுவானதாகவும், போக்குவரத்துக்கு உகந்ததாகவும் இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு தேவாசிஷ் சவுத்திரியின் (devasish@iasst.gov.in) என்ற இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761050
------
(Release ID: 1761124)
Visitor Counter : 253