சுற்றுலா அமைச்சகம்

புத்த சமய சுற்றுலா தேவையை அதிகபடுத்த புத்த சமய தொடர் சுற்றுலா மாநாட்டிற்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 05 OCT 2021 12:32PM by PIB Chennai

இந்தியாவின் பன்முக சுற்றுலா வாய்ப்புகளில் ஒன்றாக புத்த சமய சுற்றுலா கவனம் பெறுகிறது. இந்த்த் தேவையை பயன்படுத்திக்கொள்ள சுற்றுலா அமைச்சகம் அக்டோபர் 4 முதல் 8 வரை புத்த சமய வட்டப்பாதை சுற்றுலா ரயில் பயணத்திற்கும் கருத்தரங்கிற்கும் ஏற்பாடு செய்துள்ளது. புத்த சமயம் சார்ந்த முக்கியமான இடங்களைப் பார்வையிடவும் புத்தகயா, வாரணாசி ஆகிய இடங்களில் கருத்தரங்கில் பங்கேற்கவும் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் சுற்றுலா அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள் உட்பட 125 பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.

இது தவிர சுமார் 100 உள்ளூர் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், மற்றும் விருந்து உபசார பிரிவை சேர்ந்தவர்கள் சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக புத்தகயா மற்றும் வாரணாசி கருத்தரங்கில் கலந்துகொள்வார்கள்.

சுதேசி தரிசன திட்டத்தின் கீழ் மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார், குஜராத், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புத்த சமய சுற்றுவட்ட சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.325.53 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த்த் திட்டங்கள் பல கட்ட அமலாக்கத்தில் உள்ளன. மேலும் பிரசாத் திட்டத்தின் கீழ் ரூ.44.19 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வாரணாசியில் தாமேக் ஸ்தூபி பற்றிய ஒலி, ஒளி காட்சி, சாரநாத்தில் புத்தரை பற்றி அறிவதற்கான பூங்கா ஆகிய திட்டங்கள் ரூ.9.5 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது தவிர மொழி சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்த தாய், ஜப்பான், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளின் மொழிகளில் பயிற்சியளிக்கும் திறன் கட்டமைப்பு திட்டங்களுக்கும் அமைச்சகம் செயலாற்றி வருகிறது. இந்த மொழிகளில் 2018 முதல் 2020 வரை 525 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2023 வரை மேலும் 600 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. புத்த மதம் சார்ந்தவர்களில் 97 சதவிகிதம் பேர் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் இருப்பதால் இத்தகைய மொழிப்பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

*******



(Release ID: 1761063) Visitor Counter : 354