அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தெர்மோ-எலக்ட்ரிக்கல் பொருட்களை உருவாக்க புதுமையான உத்திகளை உருவாக்கிய விஞ்ஞானிக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
Posted On:
04 OCT 2021 3:26PM by PIB Chennai
உயர் செயல்திறன் கொண்ட தெர்மோ-எலக்ட்ரிக்கல் பொருட்களை உருவாக்க புதுமையான உத்திகளை உருவாக்கிய ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பேராசிரியர் கனிஷ்கா பிஸ்வாஸ், கவுரமிக்க சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை பெற்றுள்ளார்.
இந்த விருது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான ரசாயன அறிவியல் துறையில் வழங்கப்படுகிறது. இவரது கண்டுபிடிப்பு திட-நிலை கனிம வேதியியல் மற்றும் தெர்மோ எலக்ட்ரிக் ஆற்றல் மாற்றம் துறையைச் சார்ந்தது.
இவரது ஆராய்ச்சியில் உயர் செயல்திறன் கொண்ட தெர்மோஎலக்ட்ரிக் பொருட்களை உருவாக்குவதற்கான கனிம திடப்பொருட்களின் அமைப்பு மற்றும் குணங்களுக்கு இடையேயான உறவைப் பற்றிய அடிப்படை புரிதல் அடங்கியுள்ளது. இது வீண் வெப்பத்தை ஆற்றலாக திறம்பட மாற்றக்கூடியது மற்றும் செலவு குறைந்த தொழில்நுட்பங்களாக மாற்றுகிறது. இவரது ஆராய்ச்சி, இந்தாண்டு அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்த பேராசிரியர் கனிஷ்கா, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். பெங்களூரு ஐஐஎஸ்சியில் பி.எச்டி முடித்தவர். இவர் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார். 165 ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760789
-----
(Release ID: 1760858)
Visitor Counter : 209