சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்
Posted On:
04 OCT 2021 9:05AM by PIB Chennai
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 90.79 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவிதத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது 0.78 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் மாதம் முதல், இது மிகக் குறைந்த அளவு.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,64,458; கடந்த 200 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.89 சதவீதம்; கடந்த 2020 மார்ச் முதல் இது அதிகமான அளவு.
கடந்த 24 மணி நேரத்தில் 26,718 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,31,21,247
வாராந்திர பாதிப்பு விகிதம் (1.63சதவீதம்) கடந்த 101 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் (2.10 சதவீதம்) கடந்த 35 நாட்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
இதுவரை மொத்தம் 57.42 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760677
*******
(Release ID: 1760713)
Visitor Counter : 212