தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
நம்பகமான தரவு, ஆதாரம் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்துக்கு உதவும் : மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ்
Posted On:
03 OCT 2021 5:12PM by PIB Chennai
ஆதாரம் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மூலம் தொழிலாளர்கள் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் இன்று கூறினார்.
தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தின் 101வது நிறுவன தினத்தை முன்னிட்டு சண்டிகரில் உள்ள ஷ்ரம் அலுவலக பவனில் கணக்கெடுப்பு பணியை (AFES) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழிலாளர்கள் தொடர்பான அனைத்து தரவுகளும் முக்கியமானது. ஆதாரம் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்துக்கு, அறிவியல்பூர்வமாக சேகரிக்கப்பட்ட தரவு அடித்தளம் போன்றது. தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா என்பதால், வரவிருக்கும் காலங்களில் தரவுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும்.’’ என்றார்.
இ-ஷ்ரம் இணையதளத்தின் கீழ், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பதிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், பல திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதன் தயார்நிலை குறித்தும் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், மற்றும் லடாக் பகுதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், ஆணையர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் அட்டைகளும், கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இஎஸ்ஐசி கொவிட் நிவாரண திட்டத்தின் கீழ் அனுமதி கடிதங்களையும் மத்திய அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அடல் பீமித் வியாக்தி கல்யாண் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு கடிதங்களையும் மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760604
******
(Release ID: 1760604)
(Release ID: 1760628)
Visitor Counter : 256