ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சுதந்திரத்தின் 75-வது மஹோத்சவ் –ஐ யொட்டி ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் கொண்டாடும் சிறப்பு வார விழாவை அக்டோபர் 4 அன்று திரு.மன்சுக் மண்டாவியா தொடங்கி வைக்கிறார்

Posted On: 03 OCT 2021 4:23PM by PIB Chennai

சுதந்திரத்தின் 75-வது மஹோத்சவ் –ஐ யொட்டி ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் 2021 அக்டோபர் 4 முதல் 10 வரை சிறப்பு வார விழாவை கொண்டாட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வார விழாவை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை, மக்கள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மண்டாவியா நாளை காலை 11.30 மணிக்கு தொடங்கி வைப்பார். மருத்துவத் துறையின் வரலாறு@75: எதிர்கால வாய்ப்புகள் என்ற மையப்பொருளுடன் இந்த சிறப்பு வாரம் மருந்துப் பொருட்கள் உற்பத்தித் துறை, ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஆகியவற்றால் கொண்டாடப்படுகிறது. மொகாலியில் உள்ள மருந்துப் பொருட்கள் குறித்த கல்வி மற்றும் ஆய்வுக்கான தேசியக் கழகம் ஒரு வார கால நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சுதந்திரத்தின் 75-வது மஹோத்சவ் விழாவையொட்டி 2021 அக்டோபர் 10 ஆம் தேதி நாடு முழுவதும் பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம் உடல் நலபரிசோதனை முகாம்கள் நடத்துவதற்கும் பிரதமரின் பாரதீய மருந்தக மையங்களில் முதல் உதவி பெட்டிகள் விலையின்றி வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வார விழாவையொட்டி பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் மக்கள் மருந்தக பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மருந்து விற்பனையாளர்கள் உள்ளிட்டோருடன் பொதுவான மருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கலந்துரையாடல் நடத்துவார்கள்.

இத்தகைய முகாம்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் நடைபெற உள்ளன.

 

****(Release ID: 1760609) Visitor Counter : 254