வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தூய்மை நாயகர்களுக்கான திருவிழா
Posted On:
02 OCT 2021 7:02PM by PIB Chennai
சஃபாய்மித்ரா கிரிக்கெட் லீக்கின் ஒரு பகுதியாக கலகலப்பான கிரிக்கெட் விளையாட்டில் துப்புரவுத் தொழிலாளர்களின் அணிகள் ஈடுபட்ட அரிய காட்சியை போபாலில் வசிப்பவர்கள் இன்று கண்டனர்.
லட்சக்கணக்கான துப்புரவு தொழிலாளர்களைப் பாராட்டும் வகையில் காந்தி ஜெயந்தியை ‘தூய்மை தினமாக’ இந்தியா கொண்டாடிய நிலையில், இது போன்ற புதுமையான முயற்சிகள் நாடு முழுவதும், நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டன.
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் (அகம்) கீழ் நடைபெறும் ஒரு வார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் துப்புரவு தோழர்களின் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் இது நடத்தப்படுகிறது. தூய்மை தோழர்களுக்கான தேசிய அளவிலான பாராட்டு விழாக்கள், நாட்டுக்கு சேவையாற்றும் நாயகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளன.
பெருந்தொற்று உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் நமது நகரங்களை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க அவர்கள் உதவுகிறார்கள். நேற்று (1 அக்டோபர் 2021) மாண்புமிகு பிரதமரால் தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0 தொடங்கப்பட்ட நிலையில், இன்று முதல் நடைபெறும் தூய்மை பணியாளர்களுக்கான பாராட்டு விழாக்களின் கலந்து கொள்ளுமாறு அனைத்து முதலமைச்சர்களுக்கும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் புரி கேட்டுக்கொண்டார்.
இன்று காலை 9 மணிக்கு புதுதில்லி கன்னாட் பிளேசில் உள்ள மத்திய பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு புரி கலந்து கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1760412
*****************
(Release ID: 1760452)
Visitor Counter : 222