சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சிஓபி-26 மாநாட்டில் ஆக்கபூர்வமாக ஈடுபடவும், பாரிஸ் விதிமுறைகளை முடிப்பதற்கான திட்டங்களை மதிப்பீடு செய்யவும் இந்தியா உறுதி
Posted On:
02 OCT 2021 5:41PM by PIB Chennai
சிஓபி-26 மாநாட்டில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவும், பாரிஸ் விதிமுறைகளை முடிப்பதற்கான திட்டங்களை மதிப்பீடு செய்யவும் இந்தியா உறுதியளித்துள்ளது.
பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளின் உச்சிமாநாடு சிஓபி 26. இந்த மாநாட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் இத்தாலியின் மிலன் நகரில் செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பேசியதாவது:
சிஓபி 26 மாநாட்டில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்படும். வளர்ந்த நாடுகள் பருவநிலை நிதி வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் செய்யக்கூடிய பாரிஸ் ஒப்பந்த விதிமுறைகளை முடிப்பதற்கான திட்டங்களை இந்தியா மதிப்பீடு செய்யும்.
பாரிஸ் ஒப்பந்தப்படி, வெப்பநிலை இலக்கிற்குள் உலகம் இருப்பதை உறுதி செய்வதற்கும், அதன் தாக்கங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கும், இழப்பு மற்றும் சேதத்தை குறைப்பதற்கும், இந்த தசாப்தத்தில் வலுவான தட்பவெப்ப நடவடிக்கையின் அவசரத்தை இந்தியா அங்கீகரிக்கிறது. சிஓபி 26 முடிவுகள், லட்சிய திட்டங்கள் அமல்படுத்துவதை வலியுறுத்த வேண்டும். இது வளரும் நாடுகள் தங்கள் பருநிலை நடவடிக்கைகளை அதிகரிக்க அனுமதிக்கும்.
உறுதியான மற்றும் விரைவான நடவடிக்கை, மற்றும் நிலையான நிதிதான், பருவநிலை பாதிப்புகளை குறைப்பதற்கான ஒரே வழி என இந்தியா நம்புகிறது. பருவநிலை மாற்றம், இந்தியாவின் வளர்ச்சி யுக்தியில் பொதிந்துள்ளது.
லட்சியமான பருவநிலை நடவடிக்கைகளை எடுப்பதில், இந்தியா முன்னணியில் இருந்திருக்கிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760357
*****************
(Release ID: 1760425)