சுரங்கங்கள் அமைச்சகம்
சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் கீழ் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
152-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தியது
Posted On:
02 OCT 2021 3:17PM by PIB Chennai
மத்திய சுரங்க அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 171 ஆண்டு பழமை வாய்ந்த புவியியல்-அறிவியல் அமைப்பான இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 152-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தியது. இந்த அமைப்பின் தலைமை இயக்குனர் திரு.ராஜேந்திர சிங் கர்கால், கொல்கத்தாவில் உள்ள இந்த அமைப்பின் தலைமையகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டதுடன் பல்வேறு புத்தகங்களும் வெளியிடப்பட்டன. பிரம்ம புத்திரா கதை, ஆழ்கடல் தாது எடுத்தல், தமிழகத்தின் நீலகிரி, மேற்கு வங்கத்தின் டார்ஜலிங் மலைப்பகுதிகளில் நிலச்சரிவை முன்கூட்டியே தெரிவிக்கும் முறை பற்றிய வீடியோ காட்சிகளும் திரையிடப்பட்டன.
•••••••
(Release ID: 1760398)
Visitor Counter : 204