ஆயுஷ்

கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ள ஏதுவாக மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிக்கிம் மனிப்பால் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 02 OCT 2021 2:54PM by PIB Chennai

இருதரப்பிலும் அடையாளம் காணப்பட்ட துறைகளில் ஆராய்ச்சி பணிகளை ஊக்குவித்து கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ள ஏதுவாக மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம், சிக்கிம் மனிப்பால் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

காங்டாக் மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ஸ்ரீ பிரகாஷ் மற்றும் சிக்கிம் மனிப்பால் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் (லெப்டினன்ட் ஜெனரல்) ராஜன் எஸ் கிரேவால் ஆகியோர் தத்தமது நிறுவனங்கள் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இரு நிறுவனங்களும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதுடன் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் அவர்களது வலிமையை அங்கீகரிக்க இந்த ஒப்பந்தத்தில் வகைசெய்யப்பட்டுள்ளது.

**********(Release ID: 1760378) Visitor Counter : 184