மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

5வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் கல்வி அமைச்சர்கள் கூட்டம்: திரு தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்

Posted On: 01 OCT 2021 4:31PM by PIB Chennai

 ‘‘21 ஆம் நூற்றாண்டின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காக  உலகளாவிய திறன்களை இந்தியா உருவாக்குகிறது’’ என 5வது கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டின் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறினார். இந்த கூட்டத்தில் மத்திய கல்வித் துறை இணையமைச்சர் திரு ராஜ்குமார் ரஞ்சன் சிங் மற்றும் கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான் மணிலா செயல் திட்டத்தில் கூறப்பட்ட விஷயங்களுக்கு  ஏற்ப நீண்ட கால மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கல்வி ஒத்துழைப்பை வளர்க்க இந்தியாவின் உறுதியை திரு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தினார்.

தேசிய கல்விக் கொள்கையின் நோக்கங்கள், கல்விக்கான மணிலா செயல் திட்ட விதிமுறைகளை நிலை நிறுத்தும் விஷயங்களை மத்திய அமைச்சர் பகிர்ந்து கொண்டார். 

கொரோனா தொற்று காலத்தில் கற்றல் தொடர்வதை உறுதி செய்த பிரதமரின் இ-வித்யா, ஸ்வயம், அதிக்‌ஷா போன்ற பன்முக டிஜிட்டல் தலையீடுகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பை அதிகரிக்கும் தொடர் முயற்சிகள்  குறித்தும் திரு தர்மேந்திர பிரதான் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759981

*****************


(Release ID: 1760074)