நிதி அமைச்சகம்

பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை

Posted On: 29 SEP 2021 5:17PM by PIB Chennai

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதியளிக்க தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு அறிவித்தது. இந்த தேர்தல் பத்திரத்தை தகுதியான அரசியல் கட்சிகள் மட்டுமே தங்களின் வங்கி கணக்கு மூலம் பணமாக்க முடியும்.

இந்த தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் 1.10.2021 முதல் 10.10.2021 வரை வழங்கி, பணம் ஆக்க அங்கீகாரம் பெற்றுள்ளது.

இந்த தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த தேர்தல் பத்திரத்தை, டெபாசிட் செய்த தேதியிலேயே, அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குக்கு பணம் சென்று விடும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  உள்ளவர்கள் இந்த தேர்தல் பத்திரங்களை, சென்னை பாரிமுனையில்  உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் பெற முடியும். மற்ற மாநிலங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759311

 

---



(Release ID: 1759424) Visitor Counter : 225