விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் 'அமுல் தேனை' அறிமுகப்படுத்தினார்
Posted On:
28 SEP 2021 7:37PM by PIB Chennai
'தேசிய தேனீ வாரியம்' உடனான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் கீழ், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் தயாரிப்பான அமுல் தேனை கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ருபாலா முன்னிலையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் காணொலி மூலம் இன்று அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. தோமர், சிறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். தேனீ வளர்ப்பின் மூலம் விவசாயிகள்/தேனீ வளர்ப்பாளர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க ரூ 500 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இது செயல்படுத்தப்படுகிறது.
நாட்டில் 86 சதவீத சிறு விவசாயிகள் இருப்பதாக திரு. தோமர் கூறினார். இந்த சிறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, தேனீ வளர்ப்பு போன்ற விவசாயத்தின் மற்ற பரிமாணங்களுடன் அவர்களை இணைப்பது அவசியம்.
குஜராத்தின் மண்ணில் ஒரு இனிமையான புரட்சிக்கான தனது விருப்பத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளிப்படுத்தியதாகவும், அமுல் தேனை இன்று தொடங்குவதன் மூலம் பிரதமரின் கனவை நிறைவேற்றும் பயணத்தை இந்தியா தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759036
-----
(Release ID: 1759098)