சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

நாடு முழுவதுமுள்ள கிறிஸ்துவ சமூகத்தின் முக்கியஸ்தர்களுடன் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி புது தில்லியில் இன்று உரையாடினார்

Posted On: 28 SEP 2021 4:42PM by PIB Chennai

ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் இணைந்து வாழும் ஒரு நாட்டில் கட்டாய மத மாற்றமானது எந்தவொரு மதத்தின் விரிவாக்கம் மற்றும் நம்பிக்கைக்கான சான்றாக இருக்க முடியாது என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி இன்று கூறினார்.

நாடு முழுவதுமுள்ள கிறிஸ்துவ சமூகத்தின் முக்கியஸ்தர்களுடன் புதுதில்லியில் இன்று உரையாடிய அவர், ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் சம அரசமைப்பு மற்றும் சமூக உரிமைகளும், பாதுகாப்பும் இந்தியாவில் இருப்பதாகக் கூறினார்.

ஒருபுறம், இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பெளத்தர்கள், பார்சிகள், யூதர்கள், பஹாய்கள் மற்றும் உலகின் மற்ற எல்லா மதங்களின் நம்பிக்கையாளர்களும் இந்தியாவில் வாழ்கிறார்கள், மறுபுறம் கோடிக்கணக்கில் நாத்திகர்களும் சமமான அரசியலமைப்பு மற்றும் சமூக உரிமைகளுடன் உள்ளனர் என்று திரு நக்வி கூறினார்.

உலகில் அனைத்து மதங்களின் பண்டிகைகள் மற்றும் பிற மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஒன்றாகக் கொண்டாடப்படும் ஒரே நாடு இந்தியா என்று அவர் கூறினார். பகிரப்பட்ட இந்தக் கலாச்சாரப் பாரம்பரியம், ஒன்றிணைந்து வாழ்வதின் பாரம்பரியம் ஆகியவற்றை நாம் பலப்படுத்த வேண்டும். ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் குலைக்கும் எந்தவொரு முயற்சியும் இந்தியாவின் ஆன்மாவைக் காயப்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.

உலகின் அனைத்து மதங்களையும் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்வதாகவும், அரசியலமைப்பு மற்றும் சமூக உத்தரவாதம், அவர்களின் மத, சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளின் பாதுகாப்பு ஆகியவை "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நமது வலிமையின் அழகு என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758963

----



(Release ID: 1759051) Visitor Counter : 254


Read this release in: English , Urdu , Hindi , Punjabi