வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அரசுத் துறைகளில் 22,000க்கும் மேற்பட்ட பணி இணக்கம் தொடர்பான சுமைகள் குறைப்பு

Posted On: 28 SEP 2021 4:09PM by PIB Chennai

அரசுத் துறைகளில் 22,000க்கும் மேற்பட்ட பணி இணக்கச் சுமைகள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை ஏற்பாடு செய்த பணி இணக்கச் சுமைகளைக் குறைப்பது பற்றிய பயிலரங்கில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று பேசியதாவது:

பணி இணக்கச் சுமைகளைக் குறைப்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் மிகப் பெரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தேவையற்ற சட்டங்களை அகற்றுவது, நடைமுறைகளை எளிதாக்குவது, பல செயல்பாடுகளை குற்றமற்றதாக்குவது போன்றவைதான் இந்தப் பணியின்  நோக்கம்.

வர்த்தகத்துக்கான தடைகளை நீக்கி, அவற்றுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது

முன்பு, ஏராளமான ஒழுங்குமுறை விதிகள், பணி இணக்கங்கள், முதலீட்டாளர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தின. தற்போது, தொழில் முனைவோர்களுக்கு சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றைச் சாளர முறை இணையளத்தில் மத்திய அரசின்  18 துறைகள் மற்றும் 9 மாநிலங்களின் ஒப்புதல்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் மேலும் 14 துறைகளும், 5 மாநிலங்களும் இந்த இணையதளத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சேர்க்கப்படும்.

 

அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனையுடன் கூடிய அணுகுமுறை மூலம் தடைகளை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு அகற்றப்படுகின்றன.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758949

=----(Release ID: 1759025) Visitor Counter : 111