வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்: நாளை முதல் கொண்டாடுகிறது, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்
Posted On:
26 SEP 2021 2:24PM by PIB Chennai
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நாளை முதல் அக்டோபர் 3ம் தேதி வரை கொண்டாடுகிறது.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக, தூய்மை இந்தியா திட்டம் - நகர்ப்புறம் 2.0 மற்றும் அம்ருத் - 2.0 திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின், 7வது ஆண்டு விழா, நாளை நடைபெறுகிறது. இதில் தூய்மை செயலி (ஸ்வச்சத்தா ஆப்), ஸ்வச் சர்வேக்ஷன் 2022 ஆகியவை தொடங்கப்படும்.
அம்ருத் 2.0 திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வைக்கிறார். அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இந்த வாரத்தில், மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சகம் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. நகர்ப்புறத்தில் வீடுகள் என்ற தலைப்பில் வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.
சிறிய வீடுகள் திட்டத்தை 75 தொழில்நுட்ப நிபுணர்கள் பார்வையிடுகின்றனர். பிரதமரின் வீட்டு வசதி திட்ட பயனாளிகள், நாடு முழுவதும் பழங்கள் மற்றும் மூலிகை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758247
----
(Release ID: 1758366)
Visitor Counter : 242